பல்லவியும் சரணமும் II - பதிவு 7
சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா ...
2 அது காலங்கள் மாறினும் மாறாதது....
3. கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் ...
4. சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை ...
5. தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை ...
6. மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ...
7. அன்று சொன்ன வார்த்தை அலை போல ...
8. அவள் நிலை நீ உணர மாட்டாயோ...
9. தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் ...
10. சின்னாளம்பட்டியிலே கண்டாங்கி எடுத்து ...
11. கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தின் கோலங்கள்...
12. மடி மீது விளையாடும் சேயாக ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
12 மறுமொழிகள்:
1. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
2. நாணமோ இன்னும் நாணமோ
10. அடி என்னடி ராக்கம்மா
12. நான் பேச நினைப்பதெல்லாம்
7. kaNkaL iraNdum enRu unnaik KAnuMO
8.Ayiram nilave Vaa
10.ennadi raakkamma pallakku
12. Naan pesa ninaippethellaam
//சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், //
பாலா...'பழைய பல்லவி' எனக்குத் தெரியும்மான்னு தெரியவில்லை... முயற்சிக்கிறேன் :)
//அவள் நிலை நீ உணர மாட்டாயோ...//
ஆயிரம் நிலவே வா ஒராயிரம் நிலவே வா (sb bala) ... சாந்தி நிலையம்
//சின்னாளம்பட்டியிலே கண்டாங்கி எடுத்து ...//
அடி ராக்கு , என் மூக்கு, என் பல்லு ... அடி என்னாடி ராக்கம்மா (tms)... பட்டிக்காடாம் பட்டணமாம்
பத்மா, சந்திரா,
நன்றி ! கூறிய பதில்கள் அனைத்தும் சரி !
கோவி கண்ணன்,
நன்றி !
//பாலா...'பழைய பல்லவி' எனக்குத் தெரியும்மான்னு தெரியவில்லை...
//
:)))))))))))
"ஆயிரம் நிலவே வா ஒராயிரம் நிலவே வா" --- திரைப்படம் தவறு ! விடை "அடிமைப் பெண்"
5 தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை ...
பாடல் .."காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்.." படம்: கோபுர வாசலிலே?
6. மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ...
ஆகாய வெண்ணிலாவே.. தரை மீது வந்ததேனோ.. அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
11. . கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தின் கோலங்கள்...
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்...
படம் அந்தமான் காதலி..?
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
Seemachu,
All three you answered are correct, 10/10 :)
enRenRum anbudan
BALA
இனிய பாலா,
4. உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே (பறக்கும் பாவை)
9. உன்னை நான் சந்தித்தேன் (ஆயிரத்தில் ஒருவன்)
அன்புடன்
ஆசாத்
Dear Azad,
Both are correct !
//3. கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் ...
//
As no one answered this, pallavi is
"mUnRu thamiz thOnRiyathum unnitamO ? n-I mUvEnthar vazi vantha mannavanO ?"
ஆசாத்
நேற்றிலிருந்து நன்றாக தெரிந்த பாடல், என்ன பாடல் என்றூ யோசித்து கொண்டே இருந்தேன். நினைவூட்டியமைக்கு நன்றி
கேட்கத் தெரிந்த காதுகள் எங்களுக்கு
நினைக்கத் தெரிந்த மனம் உங்களுக்கு
எழுதத்தெரிந்த பதிவாளர்களுக்கு என் நன்றிகள்.
ரசிக்க இன்னும் ஒரு பதிவு.
Post a Comment